ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு மீண்டும் ஒரு திடீர் நெருக்கடி..!!!

இலங்கையில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பளர் கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்காக தனது முழுமையான சக்தியையும் வழங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தோல்வியுற்றதால் அவர்களுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எந்த எண்ணமும் இல்லை என வாதம் ஒன்று அந்த கட்சியில் இருந்து தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முன்னரே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆசன அமைப்பாளர்கள் பெரும்பான்மையினருடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து இருப்பதனால் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றாலும் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி குழுவுக்கு உறுதியளித்த அமைச்சர் பதவிகளை வழங்க கூடாது என மொட்டின் பெரும்பான்மையானவர்களின் கருத்துள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி எம்பிக்களுக்கு மொட்டின் மேடையில் ஏறுவதற்கான வாய்ப்பு இல்லாத வகையில் மொட்டு ஆதரவாளர்களால் அவர்களை நிராகரித்துள்ளதால் அவர்களுடன் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட தேவையில்லை என மொட்டு தரப்பினர் வாதம் செய்துள்ளனர்.

30% வேட்புமனுக்களை வழங்குவதற்கான விருப்பம் மொட்டிற்கு இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட ஸ்ரீலசுக எம்பிக்கள் குழுக்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் பதவிகள் எதுவும் கிடைக்காத நிலைமை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக இறுதி தீர்மானம் மொட்டினால் இதுவரை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!