ஐக்கிய தேசிய கட்சி மூன்று உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து கொள்ள தீர்மானம்..!!!

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள பரபரப்பு தேர்தல் மத்தியில் பல கட்சிகள் தனது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சி பிரபல உறுப்பினர்கள் 3 பேர் அரசியல் புதிய தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.

நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, மயந்த திஸாநாயக்க, விஜேபால ஹெட்டிஆராச்சி போன்ற மூன்று உறுப்பினர்களும் இவ்வாறு தீர்மானம் எடுக்க தயாராகி வருகின்றனர். அதேவேளையில் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல அதிரடி தீர்மானம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

இவர்கள் மூன்று பேரும் சஜித் பிரேமதாவை எதிர்கால ஜனாதிபதி ஆக்கும் எண்ணத்தை முற்றாக கைவிட்டுள்ளதாகவும், அவரது வெற்றிக்காக போராடும் போராட்டத்தை கைவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் ஒன்றிணைந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!
இலங்கை , இந்திய மற்றும் அவுஸ்திரேலியச் செய்திகளுக்கு!!