" "" "

இலங்கையில் முக்கிய அமைச்சின் செயலாளர் பதவியில் முஸ்லீம் பெண் ஒருவர் நியமிப்பு..!!!

கடந்த 16 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பாக போட்டியிட்டு மக்களின் அதிக வாக்குகளால் வெற்றி பெற்று கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் புதிய ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பதவி பிரமாணம் செய்து கொண்ட நிலையில் புதிய அமைச்சரவையும் நியமித்தார்.

மேலும் இந்த நிலையில் இலங்கையில் முக்கிய அமைச்சின் செயலாளராக ஒரு முஸ்லீம் பெண் இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார்.திருமதி எஸ்.எம் முஹமட் எனும் பெண் மணியே இவ்வாறு புதிய அரசாங்கத்தின் சுற்றுலா மற்றும் விமான அமைச்சகத்தின் புதிய செயலாளர் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.

புர்கா அல்லது நிக்காப் எதுவும் இன்றி அடிப்படை இஸ்லாமிய மதவாதத்தில் மூழ்காத முஸ்லிம் பெண்மணியாகவும் எஸ்.எம் முஹமட் விளங்குகின்றது. அதையடுத்து இன்று அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

அதையடுத்து புதிய காபந்து அரசாங்கத்தில் எந்தவொரு முஸ்லீம்களும் உள்ளீர்க்கப்படவில்லை என பரவலாக விமசனங்கள் எழுந்துள்ளது.