தனக்கு விசேட சலுகை வழங்க வேண்டும் எனக் கோரி பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பிய ரணில்..!!

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு விசேட சலுகை வழங்க வேண்டும் எனக் கோரி சமகால பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரியவருகின்றது. தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிரதமர் ஒருவர் அமைச்சரவை அந்தஸ் உள்ள அமைச்சர் ஒருவருக்குரிய சலுகைகளை பெறலாம் என்பதை சுட்டிக்காட்டியே ரணில் சலுகைகளை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற செயலாளர் ஊடாக, இந்த கடிதத்தை அவர் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

மேலும் இந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு அனுப்பப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் கடிதம் தற்போது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ரணிலின் கடித்தத்தில் அவருக்காக குண்டு துளைக்காத வாகனம், நோயாளர் காவு வண்டி, 200 பொலிசார், 17 இராணுவத்தினர், பொலிசாருக்கு 9 வாகனங்கள், ரணிலின் அலுவலகத்திற்கு 8 வாகனங்கள், பிரத்தியேக வைத்தியர், தாதியர், உத்தியோகபூர்வ வாசஸ்தலம், அலுவலகம், அதற்கான பணியாளர்கள், செயலாளர் ஆகியோரை ரணில் கோரியுள்ளதாக கூறப்பட்டுகின்றது