" "" "

ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு இன்று விஷமிகளால் தீ வைப்பு…!!

நுவரெலியா ஹட்டன் பகுதிக்கான பிரதான குடிநீர் அமைவிடமாக ஹட்டன் சிங்கமலை காட்டுப்பகுதிக்கு இன்றைய தினம் விஷமிகளால் தீ வைக்கப்பட்டதன் காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளது எனவும் குறிப்பிடப்படுகின்றன. இந்த பாரிய தீ விபத்துக்கள் எற்படுவதன் காரணமாக வனப்பகுதியில் காணப்படும் நீரூற்றுகள் வற்றி வருகின்ற அபாய நிலையை எதிர்நோக்கியுள்ளன. இந்த தீயினால் நாட்டுக்கே உரித்தான அரிய வகை தாவரங்கள், வன வலங்குகள் , உயிரினங்கள், உட்பட மருந்து மூலிகைகள் போன்ற அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்படுகின்றன.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தற்போது காணப்படுகின்ற வறட்சியான காலநிலை மலையகப்பகுதியில் நிலவி வருவதனால் காடுகளுக்கு தீ வைக்கும் சமபவங்களும் அதிகரித்துள்ளன. ஆகவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மலையகத்தில் காணப்படும் காட்டு வளம் தொடர்ந்தும் அழிக்கப்படுவதனால் காட்டுப்பகுதியில் வாழும் கொடிய உயிரினங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுகின்றன.

மேலும் இது தொடர்பாக பொது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு காடுகளுக்கு தீ வைப்பவர்களை கண்டால் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்குமாறும், சூழல் பாதுகாப்பாளர்கள் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், கடந்த ஏழு நாட்களில் மாத்திரம் ஹட்டன், பொகவந்தலாவ, வட்டவளை, எல்ல, கண்டி, இறம்பொடை உட்பட 7 இடங்களில் இவ்வாறு காட்டுத் தீ பரவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.