" "" "

கனடா, சுவிட்ஸர்லாந்து உட்பட 48 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இலவச ஒன் அரைவல் விசா திட்டம் நீடிப்பு..!!

ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட் இலவச ஒன் அரைவல் விசா திட்டமானது இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஸ்ரீலங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஸ்ரீலங்காவில் நடந்த பயங்கர தற்கொலைக்குண்டு தாக்குதலை தொடர்ந்து சுற்றுலாத்துறை பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது. அவ்வாறன சந்தர்ப்பங்களில் ஸ்ரீலங்காவிற்கான சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இலவச ஒன் அரைவல் விசா திட்டம் கொண்டுவரப்பட்டது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கனடா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, அவுஸ்ரேலியா, இத்தாலி, மலேஷியா, நியூசிலாந்து, நோர்வே, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தாய்லாந்து, பிரித்தானியா, அமெரிக்கா உட்பட 48 நாடுகளுக்கு இந்த சலுகையானது கொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து 6 மாதங்கள் நடைமுறையில் இருந்த இந்த சலுகைத்திட்டமானது இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்த இலவச ஒன் அரைவல் விசா திட்டத்தை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கால நீடிப்பு அறிவிப்பானது குறித்த 48 நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.