பொதுத் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலை குறிக்கோளாகக் கொண்டு அனைத்துத் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய அமைப்புக்களை அதிகரிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இன்றைய தினம் சிறிகொத்தாவில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்களுடன் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் மற்றும் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் ஐ.தே.கவின் தொகுதி அமைப்பாளர்களுடன் சந்திப்பில் கலந்துகொண்டனர். எதிரவரும் பொதுத் தேர்தலுக்காகக் கட்சியைத் வலுப்படுத்துவதற்காக அக்கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் முன்னணி உள்ளிட்டோருடனும் எதிர்வரும் தினங்களில் சிறிகொத்தாவில் சந்திப்புக்கள் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளன.