ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்..!!

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் ஆறு இடங்களில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னணியில் மாலைதீவு பிரஜைகள் 4 பேர் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாலைதீவு பிரஜைகள் 4 பேரையும் கைது செய்ய குற்றப் புலனாய்வு பிரிவினரின் தனிப்படை ஒன்று சிறப்பு விசாரணைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேகநபர்களில் இருவரை அடையாளம் கண்டுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினரும், சர்வதேச பொலிஸாருடன் ஒன்றிணைந்து அவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதோடு ஏனைய இருவர் தொடர்பாக தகவல்களையும் சர்வதேச பொலிஸாரின் தகவல் கட்டமைப்பு ஊடாக பகிர்ந்து தேடி வருவதாக தகாவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நான்கு மாலை தீவு பிரஜைகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காலத்தில், அல்லது அதனை அண்மித்த நட்களில் இந்த தாக்குதல்களை நடத்திய தீவிரவாதி சஹ்ரானின் பயங்கரவாத கும்பலுடன் மிக நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளமை தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.