கொரோனா சந்தேகத்தில் உயிரிழந்த முதியவரின் சடலம் மீட்பு..!!

கொழும்பு – மேட்டெகொட வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் 67 வயதுடைய முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி குறித்த நர் மாலைதீவிலிருந்து இலங்கைக்கு வந்தார். பொது சுகாதார அதிகாரிகள் அவரது சடலத்தை பார்த்ததாகவும், அவர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்திருக்கலாம் எனவும் கஹதுடுவ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அவரின் சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அந்த வீடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவரது உயிரிழப்பு தொடர்பான அறிக்கை வரும் வரை அந்த வீட்டிலிருப்பவர்களை சுய தனிமைக்குள்ளாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.