ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை ஆரம்பித்த மஹிந்த தேசப்பிரிய…!!!

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தீவிரமாக ஆரம்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தலை விசேட வர்த்தமானியில் அவர் இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவார் என்றும் அது தொடர்பில் அரச அச்சகரை அவர் சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளதாகவும் அறியமுடிந்தது.

பெரும்பாலும் வரும் 18 அல்லது 19 ஆம் திகதிகளில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். இதேவேளை அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுடனும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரம் ஒன்றிணைந்து விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

தேர்தல் தொடர்பாக அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் , அரச வாகனங்கள் தேர்தலுக்கு பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.