கடலில் நீராட சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மற்றும் இரு மகள்மாரின் இறுதி ஊர்வலம்..!! மக்களின் கண்ணீர் வெள்ளத்தின் மத்தியில் இடம்பெற்றது.

திஸ்ஸமாராம, கிரிந்த கடலில் நீராட சென்ற போது கடலலைகளில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக பலியான தந்தை மற்றும் இரு மகள்மாரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் பல்லாயிரம் கோடி மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் மத்தியில் இடம்பெற்றது. மேலும் மூன்று பேர்களின் சடலங்கள் திஸ்ஸமாராம மருத்துவமனையில் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களின் உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும் இதனை தொடர்ந்து மூன்று பேர்களின் சடலங்களையும் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக் கிரியைகள் பெரும் தொகையான மக்களின் கண்ணீருக்கு வெள்ளத்தின் மத்தியில் இடம்பெறுகின்றது. மேலும் ஹட்டன், குடாகம பகுதியில் உள்ள பொது மயானத்தில் தந்தை மற்றும் இரு மகள்மாரினதும் சட்டங்களும் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

திஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட சென்ற குடும்பத்தினர் கடல் அலையில் சிக்கிய நிலையில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். பின்னர் தந்தையும் ஒரு மகளும் உயிரிழந்ததுடன், தாயும் மற்றுமொரு மகளும் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி மற்றைய மகளும் உயிரிழந்தார். மேலும் நுவான் இந்திக்க விஜேயசூரிய (39 வயது), நேசத்மா சாகதி விஜயசூரிய (6 வயது), நதிஷா ஈனோமி (4 வயது) ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிந்துள்ளார்.