நாட்டின் காலநிலை மாற்றம்…!!!

இலங்கையின் சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த மாகாணம் மற்றும் மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரை பலத்த மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகவே காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல பகுதிகளில் பிற்பகல். 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்க அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.