google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

மக்களுக்கு இலங்கை பொலீஸார் விடுத்துள்ள எச்சரிக்கை..! கொரோனா வைரஸின் தற்போதைய நிலை…!!

இலங்கையில் கொரோனா தொற்று முழுமையாக நீக்கப் பட்டு விட்டது என்று அறிவிக்கப் பட்ட போதும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் வெளி நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு வருவதே.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இலங்கைக்கு அழைத்து வரப்படும் அனைவரும் தனிமைப் படுத்தலில் தடுத்து வைக்கப் படும் நிலையில் வருவதில் 25% பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் இலங்கையின் முழு நோயாளர்கள் எண்ணிக்கை 2010 ஆக இருந்த நிலையில் இன்றைய தினம் 2014 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை பொலீஸார் மக்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விட்டுள்ளனர். கடல்வழி மார்க்கமாக வெளி நாடுகளில் இருந்து கொரோனா நோயாளிகள் நாட்டுக்குள் வரலாம். அதனால் பாதுகாப்பு அவசியமாகும்.

முக கவசம் இன்றி வெளியே செல்லும் மக்களுக்கு எதிராக தொடர்ந்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப் படும். பாதுகாப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அனைவரும் 14 நாட்கள் தனிமை படுத்தப் படுவதுடன் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப் படும் என எச்சரித்துள்ளனர்..!!