" "" "

இலங்கையில் 27 உணவு பொருட்களுக்கு விலை குறைப்பு.! இந்த இடங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.!!

இலங்கையில் 27 அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்து நிர்ணய விலையில் மக்களுக்கு வழங்கப் பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதம் வரையான காலபகுதியில் இது நடைமுறையில் இருக்கும் என கூறப்படுகின்றது.

மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் சிவப்பு அரிசி, வெள்ளை அரிசி, சீனி, பருப்பு, தேயிலை, மிளகாய் தூள், மற்றும் அனைத்து தூள் வகைகளும், செமன் டின் உட்பட சுமார் 27 பொருட்களுக்கு நிலையான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது தொடர்பில் வர்த்தக அமைச்சு வர்த்தகர்களுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த விலை குறைப்பு லங்கா சதொச மற்றும் Qshop ஆகிய இடங்களில் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்கள் ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்..!!