" "" "

கொரோனா நோயாளிகளால் நிரம்பிய வைத்தியசாலைகள்.! இலங்கையில் தவிக்கும் மக்கள்.!

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அரசு நாட்டை முடக்காமல் உள்ளது மக்களின் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. சீனாவின் வுஹான் நகரில் முதல் முதல் கண்டுபிடிக்கப் பட்ட கொரோனா வைரஸ் இன்றளவில் உலகம் முழுவதும் பரவி உள்ளதுடன் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர் இலங்கையில் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப் பட்ட நிலையில் மே மாத இறுதிக்குள் கொரோனா வைரஸ் முற்றாக கட்டுப் பாட்டுக்குள் வந்தது. கொரோனா வைரஸை முதல் முதல் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் முதல் மூன்று இடத்தில் இலங்கை இருந்தது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் இந்த மாதம் கம்பஹா பகுதியில் ஆடை தொழிற்சாலையில் பணி புரிந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப் பட்டதை தொடர்ந்து இலங்கையில சுமார் 2 வாரத்திற்குள் 6 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இது வரை கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 25 மாவட்டங்களிலும் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப் பட்டுள்ள போதும் அரசு நாட்டை முடக்கவில்லை.

சுமார் 2 வாரங்களாக பெரிதாக கவனம் எடுக்காமல் நாளைய தினம் மேல் மாகாணத்திற்கு மட்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே இலங்கையில் கொரோனா வைத்தியசாலைகள் நிரம்பியுள்ள நிலையில் இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.