" "" "

பிக் பாஸ் வீட்டிற்குள் அராஜகம் செய்யும் அர்ச்சனாவின் உண்மை முகத்தை வெளிப்படுத்திய ஸ்ரீப்ரியா.! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

பிக் பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் ரசிகர்களின் அதிக வெறுப்பை சந்தித்தவராக தொகுப்பாளினி அர்ச்சனா. பிரபல சானலில் முன்னணி தொகுப்பாளினியான அர்ச்சனா கலகலப்பாக பேசி ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து அர்ச்சனாவின் செயற்பாடுகள் பிடிக்கவில்லை,

சனம் சுரேஷ் சண்டையின் போது மன்னிப்பு கேட்கும் படி கட்டாயப் படுத்தியது யாருக்கும் பிடிக்கவே இல்லை, அதே போல் நிஷாவிடம், ரம்யாவிடம் மன்னிப்பு கேட்க சொல்லி கட்டாயப் படுத்தியது, வீட்டில் அவர் மட்டுமே பெரியவர் போல் நடந்துகொள்வது என அர்ச்சனாவை பார்த்தாலே ரசிகர்களுக்கு எரிச்சல் வந்துவிடுகிறது. ரசிகர்களை போல் பிரபலங்களும் அர்ச்சனாவின் செயலை கண்டித்து வருகின்றனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இயக்குனரும் பிக் பாஸ் ரசிகருமான சதீஷ் இந்த அர்ச்சனா எப்போது வீட்டை விட்டு வெளியேறுவார் என கேட்டுள்ளார். அதே நேரம் நடிகை ஸ்ரீபிரியா, அர்ச்சனா சென்றதில் இருந்து வீடு இரண்டாகி விட்டது, குரூபிஸத்தை அர்ச்சனாவே ஆரம்பித்தார். ரியோ, நிஷா, வேல்முருகன், அர்ச்சனா, இவர்கள் என்ன செய்தாலும் அது சரி தான்.

மற்றவர்கள் செய்வது தான் தவறு, இப்படி அர்ச்சனா அத்துமீறி நடந்துகொள்வது எனக்கு பிடிக்கவே இல்லை, அத்துடன் இவர் ஒன்றும் பிக் பாஸ் இல்லை, சாதாரண போட்டியாளர் தான். ஒவ்வொருவருரிடமும் கடுமையாக நடந்துகொள்ள அர்ச்சனாவிற்கு யார் அனுமதி கொடுத்தது என கிழித்து தொங்கவிட்டுள்ளார்.!