பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த முக்கிய அறிவிப்பு…!!!

இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றியடைய முடியுமென்றால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாகவும், இல்லையென்றால் போட்டியிடப் போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கம்பஹா – பியகம ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனத்திலுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் இன்று காலை நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது பிரதமர் தெரிவிக்கையில்.

ஐக்கிய தேசியக் கட்சி தாழ்ந்த இருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தானே கட்சியை மீட்டெடுத்து பாதுகாப்பாக உயர்த்தியுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், 70 வயது வரை கட்சியிலும் அரசியலிலும் பல்வேறு பதவிகளை நேர்மையுடன் வகித்து வந்ததை நினைவு கூர்ந்துள்ளார். அரசியலில் ஓய்வு பெறுவது என்பது அவ்வளவு கடினமான விஷயம் இல்லை எனவும் பிரதமர் தெரிவித்தார்.