" "" "

வெளி நாட்டு ஆண்களுக்கு ஆசை காட்டி ஏமாற்றிய பெண்..! நீதிபதி கொடுத்த உத்தரவு..!!

ஆண்களை ஆசை காட்டி ஏமாற்றி பணம் பறித்த மோசடி வழக்கில் சிக்கியவர் “ஆடி போனா ஆவனி ” திரைப்படத்தில் நடித்த ஹீரோயின் சுருதி. ஜெர்மனியில் பணிபுரிந்து வந்த பாலமுருகன் என்பவருடன் பழகிய வந்த ஸ்ருதி அவரை திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்துள்ளதாக கூறியதை தொடர்ந்து பாலமுருகன் முழுவதுமாக ஸ்ருதியை நம்பினார்.

!Advert!

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் ஸ்ருதி தனது தாய்க்கு கொடுமையான நோய் என்றும் அவரை காப்பாற்ற பணம் தேவை என கேட்டுள்ளார். தனது வருங்கால மனைவி என்ற நம்பிக்கையில் ஸ்ருதி கேட்டபோதெல்லாம் பணம் அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை வாங்கிக்கொண்ட ஸ்ருதி பாலமுருகனிடம் இருந்து விலக ஆரம்பித்தார்.

இதனை உணர்ந்துகொண்ட அவர் தேடிபார்த்த போது ஸ்ருதி மற்றும் அவரது வளர்ப்புத் தாய் மற்றும் மாமாவுடன் சேர்ந்து பலரை ஏமாற்றியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலமுருகன் பொலீஸில் புகார் கொடுத்தார். இதனை செய்து ஸ்ருதி உட்பட மற்றைய மூவரையும் கைது செய்தனர்,

!Advert!

அதன் பின் ஜாமீனில் வெளியே வந்த ஸ்ருதி தற்போது நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஸ்ருதியை பற்றிய தவறான செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவை இணையத்தில் வெளியாகி உள்ளதாகவும் அவற்றை இன்றளவும் யாரும் நீக்கவில்லை என்றும்

அதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மனுவை பரிசோதனை செய்த நீதிபதி இரண்டு வாரத்திற்குள் அவை அனைத்தையும் நீக்கும் படி பொலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்..!

!Advert!