" "" "

இவருடன் நடிப்பது மரணத்தை தேடி நானே செல்வது போன்றது” இனிமேல் இந்த தமிழ் நடிகருடன் நடிக்க மாட்டேன் , நடிகை ஸ்ருதிஹாசன் அதிரடி.!!

சினிமா ரசிகர்களால் உலக நாயகன் என கொண்டாடப் படும் கமலஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன். இசை துறையின் மீதான ஆர்வத்தில் சினிமாவிற்கு வந்து தற்போது நடிகையாகவும் அசத்தி வருகிறார். ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது, அதன் பின் காதல் ஸ்ருதிஹாசனின் கண்ணை மறைக்க சினிமாவை விட்டுவிட்டு காதலில் விழுந்தார்.

இந்த காதல் நிலைகாத நிலையில் மீண்டும் சினிமாவின் பக்கம் திரும்பினார். தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத நிலையில் க்ராக் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்பட சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இவர் 2020ம் ஆண்டு விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

தற்போது திரைப்படத்தின் ஒரு நாள் காட்சிகள் மட்டுமே எடுக்க இருக்கும் நிலையில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டார். விஜய் சேதுபதிக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் சில நெருக்கமான காட்சிகள் எடுக்க இருக்கும் நிலையில் ஸ்ருதி ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளது பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் விஜய் சேதுபதி தானாம்.

திரைப்படம் ஆரம்பித்ததில் இருந்து பல முறை ரசிகர்களை கட்டிப் பிடிக்க முத்தம் கொடுக்க வேண்டாம் என படக்குழுவும் ஸ்ருதிஹாசனும் சொன்னாலும் விஜய் சேதுபதி கேட்கவில்லையாம். எப்போ ரசிகர்கள் விஜய் சேதுபதியை சந்திக்க வந்தாலும் கட்டிப் பிடித்து விடுகிறாராம்.

இறுதி சூட்டிங் அன்று மாஸ்க் கூட அணியாமல் ரசிகர்கள் குவிந்த நிலையில் அவர்களுடன் நின்றும் கட்டிப் பிடித்தும் புகைப்படம் எடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இதனால் ஸ்ருதிஹாசன் படபிடிப்பு தளத்தை விட்டு வெளியேறிவிட்டாராம். அத்துடன் இனி நடிக்க முடியாது என்றும் கூறி விட்டாராம். இது போல் பல முறை நடந்த நிலையில் திரைப்படத்தை நிறைவு செய்ய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் ஸ்ருதி ஹாசன் சென்றதுடன் திரைப்படத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியுள்ளாராம்.

விஜய் சேதுபதியின் பாதுகாப்பற்ற செயலால் என்னால் கொரோனாவுடன் வாழ முடியாது என கூறியுள்ள ஸ்ருதிஹாசன் திரைப்பட வாய்புகள் இவருடன் நடிக்க மாட்டேன், விஜய் சேதுபதியுடன் நடிப்பது மரணத்தை தேடி நாம் செல்வது போன்றது என கூறியுள்ளார்.!!