" "" "

உறுதி படுத்தப் பட்ட சுஜி பாலாஜி காதல்.! வைரலான வீடியோவால் கடுப்பில் ரசிகர்கள்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து பாலாஜி முருகதாஸ் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டது. டாஸ்க் செய்வதில்லை, கொடுத்த வேலை செய்வதில்லை, யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை, யார் சொல்வதையும் கேட்பதில்லை என எந்த பக்கம் திரும்பினாலும் குற்றங்கள் தான் ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் மறுபடி மறுபடி அதே தவறை செய்துகொண்டிருந்தார்.

கடந்த வார லக்ஸரி பட்ஜெட் முழுவதும் இல்லாமல் போனது, இந்த வாரமும் பாலாஜி செய்த செயலால் இல்லாமல் போகும் நிலைக்கு வந்து எப்படியோ தப்பித்துக் கொண்டது, இந்த நிலையில் இந்த வாரம் ஷிவானியை ஜெயிலுக்கு அனுப்ப ஆஜித் முடிவு செய்திருந்தார், ஆனால் பிக் பாஸ் சரியான ஆளை தேர்வு செய்தார், அதாவது டாஸ்க் சரியாக செய்யாத டீமான ரம்யா, பாலாஜி, சுசி டீமில் இருந்து இருவரை தேர்வு செய்யும் படி கூறப்பட்டது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ரம்யா எந்த டாஸ்கை கொடுத்தாலும் சிறப்பாக செய்யக் கூடியவர். அதனால் ரம்யாவை தேர்வு செய்ய முடியாது அதனால் பாலாஜி மற்றும் சுசித்ராவை ஜெயிலுக்கு அனுப்பியுள்ளனர். ஜெயிலுக்குள் சுசிக்கும் பாலாவிற்கும் சண்டை வெடித்துள்ளது. உன்னோட ஜெயில்ல போட்டு என்னை சாகடிக்கிறாங்களே என பாலாஜி கதறும் அளவிற்கு சுசியின் தொல்லை பாலாஜிக்கு இருக்கு என்றால் வேறு என்ன சொல்வது.

ஆரம்பத்தில் பாலாவை சுசி காதலிக்கிறார் என கிண்டலடித்து வந்த ரசிகர்கள் தற்போது சுசி பாலாவை நிஜமாக காதலிக்கிறார்கள் என உறுதிபடுத்திக் கொண்டுள்ளனர். காரணம் ஷிவானி பற்றி பாலாஜி பேசினால் கடுப்பாகும் சுசி இதனால் பாலாஜியுடன் சண்டையிட ஆரம்பிக்கிறார்.

பாலாஜியை விட 16 வயது சுசி நேற்றைய தினம் வெளியான Unseen காட்சிகளில் சுசி பாலாவிடம் காதலுக்கு வயது தடை அல்ல, யாரும் யாரையும் காதலிக்கலாம், யார் எது சொன்னாலும் கண்டுகொள்ள கூடாது என்கிறார். இதை வைத்தே பாலா சுசி காதலை ரசிகர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.!!