" "" "

ஒரே மாதிரி மூன்று இளைஞர்களை திருமணம் செய்த இளம் பெண்.!! அதிர்ந்து போன கணவர்கள்.!!

தனது அழகை காட்டி ஆண்களை மயக்கி திருமணம் செய்து ஏமாற்றிய பெண் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திரா சித்தூர் மாவட்டம், விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் 7 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றார். இவரது பிரிவுக்கு சுஹாசினி என்ற பெண் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளார். பணிக்கு சேர்ந்து சில நாட்களில் சுனில் சுஹாசினி இடையே நட்பு ஏற்பட்டுள்ளது, இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

காதலிக்க ஆரம்பித்ததுமே தான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் தனது குடும்பம் மிகவும் கஷ்டப் படுகிறது என கூறி சுனிலிடம் லட்சக்கணக்கான பணம் வாங்கியுள்ளார். இதனால் சுனில் சுஹாசினியை திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்த நிலையில் வீட்டிற்கு தெரிந்தால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கூறிய சுஹாசினி சுனிலுடன் கோவிலில் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்தின் பின் வேலைக்கு போகாத சுஹாசினி கணவரின் தந்தையிடம் தனது குடும்பம் மிகவும் கஷ்டப் படுவதாக கூறி பணம் பெற்றுள்ளார். தந்தையின் வங்கியில் இருந்த பணம் எடுக்கப் பட்டதை அறிந்த சுனில் சுஹாசினியிடம் சண்டையிட்டுள்ளார். தந்தையின் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என கத்தியுள்ளார். இந்த நிலையில் கணவரும் மாமனாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த அத்தனை பணம் நகையை திருடிக்கொண்ட சுஹாசினி வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வீட்டில் மனைவியை காணாத சுனில் பணம் நகையும் திருட்டு போனதை அறிந்து பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஆதார் அட்டையில் இருந்த முகவரியை வைத்து பொலீஸார் சுஹாசினியை தேடி நெல்லை சென்ற போது சுஹாசினிக்கு ஏற்கனவே திருமணமானதும், ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்ததுடன் அங்கிருந்தும் பண நகையுடன் சென்றது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து பொலீஸார் நடத்திய விசாரணையில் சுனிலை போல் வினய் என்ற இளைஞரும் சுஹாசினியின் காதலில் விழுந்து ஏமார்ந்து போனது தெரியவந்துள்ளது.மூன்று ஆண்களையும் ஒரே மாதிரி சுஹாசினி ஏமாற்றி இருப்பதும் தெரிய வந்துள்ளது, பொலீஸார் சுஹாசினியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.