" "" "

இயக்குனர் சுந்தர் சி அவர்களின் தாயாருக்காக நடிகை குஷ்பு செய்த செயல்.! வைரலாகும் புகைப்படங்கள்.!!

தமிழ் சினிமாவில் கோயில் கட்டி கொண்டாடப் பட்டவர் நடிகை குஷ்பு. ரசிகர்களால் அதிகம் நேசிக்கப் பட்ட குஷ்புவிற்கு ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் குவிந்தன. நடிகர் பிரபுவுடன் காதல் என்று கிசுகிசுக்கப் பட்ட இவர் பின் இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டார்.. இந்த ஜோடிக்கு தொழிலதிபர்களான இரண்டு மகள்களும் உண்டு.

குஷ்புவின் மூத்த மகள் இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபருக்கான விருதையும் பெற்றார். குஷ்பு அரசியல், சினிமா என் என்ன தான் ஓடிக்கொண்டிருந்தாலும் குடும்பத்தில் நல்ல மகள், அம்மா என்ற பதவியுடன் மருமகள் என்ற பெயரையும் எடுத்துள்ளார். குஷ்பு குடும்பத்தில் ஆணி வேர் என்றால் அது சுந்தர் சி யின் அம்மா தானாம். அவர் திட்டமிடலின் படி தான் அனைத்து செயற்பாடுகளும் நடக்குமாம்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மற்றைய மருமகள்கள் போல் இல்லாமல் இந்த மாமியார் மருமகள் அம்மா மகளை போலவாம். அண்மையில் சுந்தர் சி அவர்களின் தாயாருக்கு பிறந்த தினம், இதனை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இதன் போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள குஷ்பு,

எங்கள் குடும்பத்தை வழி நடத்தும் உங்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும், உங்களால் தான் குடும்பம் இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அரசியலில் எப்படியோ, வீட்டிற்கு சிறந்த மருமகள் தான் என கூறி வருகின்றனர்.!!