" "" "

பிக் பாஸ் ஒப்பந்தத்தை காட்டி மிரட்டப் படும் சுரேஷ் தாத்தா.? மன வேதனையுடன் அவர் போட்ட பதிவு.!!

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இளைஞர்களுக்கு நிகராக போட்டியிட்டு அசத்தியவர் சுரேஷ் தாத்தா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப் படும் சுரேஷ் சக்ரவர்த்தி. 80 களில் முன்னணி நாயகர்களின் திரைப்படத்தில் நடித்த சுரேஷ் சக்ரவர்த்தி பின் திருமணம் குடும்பம் என பிஸியானார்.

பல அடிகள் இழப்புகளை தாண்டி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இதன் போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்த நிலையில் வீட்டில் சிறந்த போட்டியாளராக. இருந்தார். இருப்பினும் மற்றவர்களை காப்பாற்றுவதற்காக சுரேஷ் சக்ரவர்தியை தொலைகாட்சி வெளியேற்றியது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

என்ன தான் எதையும் வெளியே சொல்லக் கூடாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் சுரேஷ் சக்ரவர்த்தியால் அப்படி இருக்க முடியவில்லை. ஒரு சில விடயங்களை பேசினார். இதனால் கடுப்பான தொலைகாட்சி பிக் பாஸ் ரீயூனியனிற்கு சுரேஷை அழைக்கவில்லை.

இதனை பலமுறை தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் பதிவிட்டதன் பின்னர் இறுதி நாளில் அழைக்கப் பட்டார். இந்த நிலையில் மீண்டும் சுரேஷ் அவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது “சட்டம், ஒப்பந்தம், என மனதை வாட்டி வதைக்கும் நிலையில் கமலஹாசன் அவரின் வார்த்தைகளே ஆறுதல் தரும் மருந்தாக உள்ளது, நன்றி ஆண்டவரே” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒப்பந்தத்தை காட்டி உங்களை மிரட்டுகிறார்களா தாத்தா என கேட்டு வருகின்றனர்.!!