" "" "

“மிகக் கொடூரமாக சித்தரவதை செய்தார்கள், மீனவர்கள் நால்வரின் மரணமும் அவர்களால் தான் நடந்தது” இலங்கையில் சிக்கிய தமிழக மீனவரின் பதபதைக்கும் நிமிடம்.!

எல்லை தாண்டி இலங்கைக்குள் சென்ற மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கொல்லப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அன்றைய தினம் கடலில் நடந்தது என்ன என்பதை குறித்த சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய மீனவர் சுரேஷ் குமார் என்பவர் தமிழ் நாட்டு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இருந்து கடல் தொழிலுக்காக கடந்த 18ம் திகதி மெசியா, சாம் சாம்சாண்டர்வின், நாகராஜ், செந்தில் குமார் ஆகியோர் சென்றனர். இவர்கள் இலங்கை எல்லைக்குள் சென்றதால் கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர். பின்னர் கடற்படை படகுடன் இவர்களின் படகை இணைத்திருந்த வேலையில் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததாக கடற்படையினரால் கூறப்பட்டது,

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் நிஜத்தில் கடற்படையினர் மீனவர்களை தாக்கியதுடன் கப்பலால் மீனவர்களின் படகை மோதி கவிழ்த்ததாக சுரேஷ்குமார் மேலும் தெரிவித்துள்ளார். 18ம் திகதி சென்ற மீனவர்களில் இருவரின் சடலம் 20ம் திகதி இலங்கையில் கரை ஒதுங்கியதாக கூறப்பட்ட நிலையில் மற்றவர்களின் உடல் கடற்படையினரால் மீட்கப் பட்டதாக கூறப்பட்டது.

பின்னர் நால்வரின் உடலும் உறவுனர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. மீனவர்களின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் தாக்கப் பட்டுள்ளனர் எனவும் உறவினர்கள் போராட்டம் நடத்தியும் வழமை போல் சென்றுவிட்டது. இந்த நிலையில் சுரேஷ் குமார் கூறுகையில் இலங்கை இராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்டால் உயிருடன் மீள்வோம் என்பதில் நம்பிக்கை இல்லை.

நான் எல்லை தாண்டி செல்லாத நிலையில் கைது செய்யப் பட்டேன், குற்றவாளி இல்லை என்பது தெரியும், இருப்பினும் யாழ்ப்பாண சிறையில் வைத்து என்னை அடித்து சித்திரவதை செய்தார்கள். கைது செய்து வாகனத்தில். அழைத்துச் செல்லாமல் வீதியில் இழுத்துச் சென்றார்கள். மிகவும் கொடுமையை அனுபவித்தேன் என கூறியுள்ளார்.!!