" "" "

கொரோனா காலத்தில் ரகசியமாக நடிகர் சூர்யா செய்த செயல்! கொண்டாடும் அவரது ரசிகர்கள்!!

கொரோனா வைரஸ் உலகையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. அதற்கு பணக்காரன் ஏழை என்றெல்லாம் யாரும் இல்லை, எல்லோரும் ஒன்று தான். யார் இறந்தாலும் சடலத்தை சில மணி நேரங்களில் எரித்து விட்டு அவர்களின் வேலையை பார்த்து சென்று விடுகின்றனர், அதாவது மரணங்கள் தற்போது மதிப்பிழந்து விட்டது. இந்த நிலையில் சேர்த்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல நன்மையை தான். இதை உணர்ந்து கொண்டவர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா.

நடிகர் சூர்யா ஏற்கனவே மக்களுக்கு பல உதவிகள் செய்து வருகின்றார். கொரோனாவால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு 1 கோடி ரூபாய் இவரது குடும்பத்தினர் சார்பில் கொடுத்து இருந்தார்கள். அது மட்டும் இன்றி இவர்களது அறக்கட்டளை மூலம் பல மாணவ மாணவிகளுக்கு உதவி வருகின்றனர். இந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் நடிகர் சூர்யா செய்த உதவி ஒன்று ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப் படுகின்றது.

கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப் படும் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களின் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களது வங்கி கணக்கிற்கு 5000 ரூபா வைப்பு செய்துள்ளார்.பின்னர் நிர்வாகிகள் மூலம் அவர்களுக்கு அறியப் படுத்தியுள்ளார்.சுமார் 500 குடும்பங்களுக்கு இது போல் சூர்யா உதவியுள்ளார்.

இது பற்றி இது வரை சூர்யா கூறாத நிலையில் உதவி பெற்றவர்கள் சூர்யாவின் நல்ல குணத்தை பாராட்டியுள்ளனர். சிறிதளவு கொடுத்துவிடு உலகிற்கே தம்பட்டம் அடிக்கும் மனிதர்கள் முன் அள்ளி கொடுத்து விட்டு அமைதியாக இருக்கும் சூர்யா எப்போதும் உயர்ந்தவர் தான்.!