" "" "

மகளுக்கு கொடுமை செய்த மருமகன்…தந்தையின் முடிவால் மகள்கள் எடுத்த கொடுமையான முடிவு…! அதிர வைத்த சம்பவம்..!!

மகள் மருமகனிடம் கொடுமை படுவதை தாங்க முடியாத தந்தை தற்கொலை செய்து கொண்டதால் மகள்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவை சேர்ந்தவர் பாபு ரெட்டி. எலக்ட்ரிகல் வேலை பார்த்து வந்த இவருக்கு ஸ்வேதா என்கிற 26 வயதான ஸ்வேதா மற்றும் 20 வயதான சாய் என இரண்டு மகள்கள் இருந்தனர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் ஸ்வேதாவிற்கு சுரேஷ் குமார் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் சுரேஷ் குமாரோ ஸ்வேதாவை மோசமாக அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தாய் இன்றி குழந்தைகளை தனது அன்பில் வளர்த்து வந்த பாபு ரெட்டிக்கு இதனை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தன் மரணத்திற்கு காரணம் மருமகன் என சுரேஷ் பாபு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ஸ்வேதா மற்றும் சாய் தாங்க முடியாமல் கதறிய நிலையில் அக்கா தங்கை இருவரும் திடீரென இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தந்தையை பிரிந்து மகள்களால் இருக்க முடியாத நிலையில் அவர்களும் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..!