அன்று ஸ்வாதி, இன்று ஸ்வேதா.! இரயில் நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட கல்லூரி மாணவி ஸ்வேதா.! மனதை பதற வைத்த சம்பவம்.!
2016ம் ஆண்டு ராம்குமார் என்ற இளைஞரால் கொடூரமாக கொல்லப் பட்ட கல்லூரி மாணவி ஸ்வாதி போல் இன்றைய தினம் ஸ்வேதா என்ற மாணவி காதலனால் கொல்லப் பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் இரயில் நிலைய வாயிலில் ஸ்வேதாவுடன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்த ராமச்சந்திரன் என்ற இளைஞரே இவ்வாறு அப்பாவி கல்லூரி மாணவியை கொலை செய்துள்ளார்.
சம்பவம் குறித்து நேரில் பார்த்த பொது மக்கள் கூறுகையில் கல்லூரி மாணவியான ஸ்வேதாவுடன் கொலையாளியான ராமச்சந்திரன் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்துள்ளார். ஸ்வேதா பல முறை செல்ல முயன்ற போதும் தடுத்து பேசிக்கொண்டிருந்த இளைஞர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் குத்தியுள்ளார்.
வலி தாங்க முடியாமல் ஸ்வேதா இரத்த வெள்ளத்தில் விழுந்த நிலையில் ராமச்சந்திரனும் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்த நிலையில் பொலீஸார் குரோம் பேட்டை அரசு மருத்துவமனையில் இருவரையும் அனுமதித்தனர்.
இருப்பினும் ஸ்வேதா சிகிச்சை பலனின்றி மரணமடைய ராமச்சந்திரன் நலமுடன் உள்ளார். கழுத்தை கறுத்துக் கொள்வது போல் கழுத்தில் மெல்லிதாக வெட்டிக் கொண்ட ராமச்சந்திரன் நாடகமாடியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்வேதாவை படிக்க விடாமல் பலமுறை ராமச்சந்திரன் தொல்லை செய்ததாக ஸ்வேதாவின் தோழிகள் கூறிய நிலையில் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.!!