" "" "

அறுசுவை உணவென்றால் என்ன ? அதன் அற்புதம் என்ன.? தமிழரின் பரம்பரிய உணவு பற்றி அறிந்துகொள்ளுங்கள் இதோ உங்களுக்காக..!!

அறுசுவை விருந்தை உண்ட அனுபவம் உண்டா? அட எங்க அதக்கெல்லாம் நேரம் கிடைக்கிறத கடையில வாங்கி சாப்பிடும் சாபம் பெற்றவர்கள் நாங்கள் என்பவர்கள்தான் இங்கு ஏராளம். நம்முடைய முன்னோர்கள் நம்முடைய உணவில் 6 வகையான சுவைகளை சேர்த்து சமைக்கும் வழக்கத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.அந்த ஆறு சுவைகளும் எவையென்று தெரியுமா?காரம், கசப்பு, இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு ஆகியவையே அவையாகும். நம்முடைய முன்னோர்கள் காரணமின்றி எதையும் செய்வதில்லை. நம்முடைய நாவானது அறியக் கூடிய அந்த ஆறு சுவைகளே ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உடலை இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப்பயன்படுகின்றன. ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனதே நம் உடல். இந்த தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.இந்த ஆறு சுவைகளும் நம்முடைய உடலிற்கு கொடுக்கின்ற ஆரோக்கியம் பற்றியும் அவை எந்தெந்த உணவில் உள்ளன என்பது பற்றியும் பார்க்கலாம் வாங்க.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

காரமானது நம்முடைய உடலுக்கு உஷ்ணம் அதாவது வெப்பத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.காரத்தை அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கசப்புச் சுவையானது உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். ஆனால் இநை்தச் சுவையை உண்பது அனைவருக்கும் கடினமானதொரு விடயம்தான்.
கசப்பை அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இனிப்புச் சுவையானது உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
காரத்தை அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்கள போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

புளிப்புச் சுவையானது இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும்.
புளிப்பை அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

துவர்ப்பானது இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
அதிகம் கொண்டுள்ள உணவுப் பொருட்களாக வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகள போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

உப்பானது ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும்
கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.