" "" "

தமிழகத்தில் கிராமம் ஒன்றில் திடீரென இறந்து விழும் காகங்கள்..! ஏதும் ஆபத்தா அச்சத்தில் மக்கள்…!!

கொரொனா வைரஸால் உலகமே ஆட்டம் கண்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள கிராமம் ஒன்றில் திடீரென காகங்கள் விழுந்து இறப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள பன்னியூர் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இந்த சம்பவம் இடம்பெறுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

விவசாய கிராமமான பன்னியூரில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 144 தடை சட்டத்தினால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் கடந்த நான்கு நாட்களாக பறந்து திரியும் காகங்கள் மயங்கி விழுவதுடன் துடிதுடித்து இறந்து போகிறது.

வீடுகளின் மீது வாசலில் ரோட்டில் மட்டும் இன்றி அருகில் உள்ள மலைகளிலும் காகங்கள் விழுந்து இறப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஏதும் அறிகுறியா என பயத்தில் இருந்தாலும் கால்நடைதுறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை செய்து காகங்களின் மரணத்திற்கான காரணத்தை அறியும் படி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..!!