உயிர் பறிக்கும் காச நோயின் அறிகுறிகளும் அதற்கான தீர்வும். படித்து அனைவரும் அறிய பகிருங்கள்..!!

என்ன தான் நோய்கள் பல இருந்தாலும் அவதானமாக இருக்க வேண்டிய சில நோய்களும் இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக தொற்று நோய்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்று நாம் பார்க்கப் போவது காசநோய் (TB) பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் தான். டிபி இலகுவாக தொற்றக் கூடிய நோயாகும்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இந்த நோய் நுண்ணுயிர் கிருமிகளின் மூலம் சுவாச உருப்பான நுரையீரல் மூலம் மனிதனை தாக்க ஆரம்பிக்கிறது. இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களை வைத்தியர்கள் பாதுகாக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இதற்கான காரணம் இவர்களில், எச்சில், சளி போன்றவற்றின் மூலம் இந்த நோய் மற்றவர்களிடம் இலகுவாக தொற்றிக் கொள்கிறது.

ஒருவருக்கு காச நோய் வந்துவிட்டது என்பதை அறிந்துகொள்ள சில அறிகுறிகள் உள்ளது.. என்ன தான் மருந்து குடித்தாலும் தொடர் இருமல், திடீரென உடல் எடை குறைவது, மூச்செடுக்க சிரம படுவது. உடல் பலவீனமாக இருப்பது போன்றவை இதன் அறிகுறிகளாகும். காச நோய் என உறுதியான பின் வைத்தியர்களின் மருந்தை எடுத்துக் கொள்ளும் அதே நேரம்..

ஒவ்வொரு நாளும் காலையில் இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை சாப்பிட்டு வர வேண்டும். பூண்டு காச நோய்க்கு சிறந்த மருந்தாகும். அடுத்து கொய்யாப் பழம், மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்றவை சாபிட்டு வர வேண்டும். தானிய வகைகளை காச நோய் உள்ளவர்கள் அதிகம் எடுத்துக் கொள்வது சிறந்தது.

காலை எழுந்ததும் சூரிய வெளிச்சம் படும் படி சிறிது நேரம் அமர வேண்டும். அத்துடன் எலுமிச்சை சாறு குடிக்கலாம். காச நோய் உள்ளவர்களுக்கு அதிக நோயெதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு ஒரு கொய்யாப் பழம் சரி சாப்பிடுவது அவசியமாகிறது..!!