புதிய செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் ஏவவுள்ள ஐக்கிய இராச்சியம்..!!

ஐக்கிய இராச்சியம் தனது புதிய செயற்கைக் கோள் ஒன்றை விண்ணில் ஏவவுள்ளதாக அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தை கண்காணிப்பதற்காக இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோளானது டேட்டா சென்டர் ஒன்றினை உள்ளடக்கியிருக்கும்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Satellite Data in Environmental Science (SENSE) நிறுவனமே இந்த செயற்கைக்கோளினை ஏவுவதற்கான முழுப் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு தேவையான நிதியுதவியினை Natural Environment Research Council மற்றும் the UK Space Agency என்பன வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் காபன் வெளியீட்டினை குறைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டேட்டா சென்டரானது சுமார் 50 PhD ஆராய்ச்சியாளர்களை கொண்டு செயற்படவுள்ளது.