" "" "

இந்த வருடம் iPhone SE 2 என்னும் ஸ்மார்ட் கைபேசியை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுவனம்..!!!

ஆப்பிள் நிறுவனம் ஒரு அமெரிக்கக் கணினி மற்றும் நுகர்வோர் இலத்திரனியல் கருவிகள் நிறுவனமாகும். ஆப்பிள் நிறுவனமான கலிபோர்னியாவில் 1976 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஐஃபோன் மட்டும் இன்றி கணனி, ஐப்பாடு போன்றன உருவாக்கி வருகின்றது. தொழிநுட்ப உலகில் பிரபல்யம் அடைந்து வருகின்ற ஆப்பிள் நிறுவனம் பல பில்லியன் கணக்கான பாவனையாளர்களைக் கொண்டுள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆப்பிள் நிறுவனமானது உயர் தொழில்நுட்பம் கொண்ட ஐபோன்களை அறிமுகம் செய்து வருகின்ற ஒரு நிறுவனமாகும். இருப்பினும் அவற்றின் விலையும் ஏனைய கைபேசிகளின் விலையை விட அதிகமாக காணப்படுகின்றது. இதனால் iPhone SE எனும் குறைந்த விலையிலான ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வருடத்திற்கு முதல் வருடமான 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் இந்த நிலையில் அதற்கு அடுத்த பதிப்பான iPhone SE 2 கைப்பேசியினை இந்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது. பெரிய தொடுதிரையினைக் கொண்டிருக்கும் என கருதப்படும் இந்த கைப்பேசியானது வழமைக்கு மாறாக முன்னரே அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதவது ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் பொதுவாக ஒவ்வொரு வருடத்திலும் செப்டெம்பர் மாதத்தில் அறிமுகம் செய்து வருகின்றது. ஆனால் இந்த வருடம் (2020) iPhone SE 2 கைப்பேசியினை மார்ச் மாதம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.