" "" "

Galaxy S20 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யவுள்ள சாம்சங் நிறுவனம்..!!

உலகளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற முன்னணி நிறுவனங்களில் சாம்சங் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் பல பில்லியன் கணக்கான பாவனையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த சாம்சங் நிறுவனம் Galaxy S20 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் விற்பனைக்கு விடவுள்ளது. கடந்த 11 ஆம் திகதி Galaxy S20 எனும் ஸ்மார்ட் கைப்பேசியை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதன்படி இந்த கைப்பேசியின் சிறப்பியல்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் Galaxy S20 ஆனது அல்ட்ரா 108 மெகாபிக்சல்கள் உடைய கேமராவினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8K வீடியோக்களை பதிவு செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட கைப்பேசிகளில் ஆகக் கூடுதலாக 4K வீடியோக்கள் வரை மாத்திரமே பதிவு செய்யக்கூடியதாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.