இந்தியாவில் மட்டும் 34.4% டிக் டாக் அப்பிளிக்கேஷன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது..!!

உலகளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற அப்பிளிக்கேஷன்களில் டிக் டாக் அப்பிளிக்கேஷனும் ஒன்றாகும். டிக் டாக் எனப்படும் வீடியோ செயலியானது அனைத்துலகிலும் காணப்பட்டலும் இந்த செயலில் இந்தியாவில் அதிகம் காணப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை உலகளாவிய ரீதியில் சுமார் 104.7 மில்லியன் தடவைகள் இந்த அப்பிளிக்கேஷன் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இதில் இந்தியாவில் மாத்திரம் 34.4 சதவீதமான பங்களிக்கின்றன. இந்த அப்பிளிக்கேஷனிற்கு பலர் அடிமையாகவும் இருக்கின்றார்கள். இதனால் பல்வேறு பிரச்சினைகள் டிக் டாக் தொடர்பில் எழுந்துள்ளது. இது போன்ற நிலையில் பாவனையாளர்கள் டிக் டாக்கிற்கு அடிமையாவதை தடுக்க புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

அவற்றில் ஒன்று Screen Time Management ஆகும். அதாவது பெற்றோர்கள் தமது பிள்ளைகள் டிக் டாக் செயலியை பயன்படுத்தும் நேரத்தினை இவ் வசதி மூலம் வரையறுக்க முடியும்.

அடுத்தது Direct Message வசதியாகும். பெற்றோர்கள் நேரடியாக குறுஞ்செய்தி அனுப்பி தமது பிள்ளைகளை கட்டுப்படுத்தும் வசதியை இது தருகின்றது.

மூன்றாவது Restricted Mode வசதி. இதன் மூலம் அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒவ்வாதது எனக் கருதும் வீடியோக்களை பெற்றோர்கள் தடை செய்யக்கூடிய வசதி இதுவாகும்.