" "" "

Lock Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்த பேஸ்புக் நிறுவனம்..!!

தொழிநுட்ப உலகில் பிரபல்யம் அடைந்து வருகின்ற முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் தனது பாவனையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் முனைப்புக்காட்டி வருகின்றது. அதற்கு இணங்க தற்போது Lock Your Profile எனும் வசதியினை பேர்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறித்த வசதியின் ஊடாக ஒருவர் தனது பேஸ்புக் போஸ்ட்களை நண்பர்களுக்கு மாத்திரம் காண்பிக்கக்கூடிய வகையில் ஒரே நேரத்தில் மாற்றியமைக்க முடியும்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பிரத்தியேகமாக இவ் வசதியானது பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் வசதியினைப் பெறுவதற்கு பேஸ்புக்கில் உங்கள் பெயரின் கீழாக உள்ள More என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் Lock Profile என்பதை கிளிக் செய்து மீண்டும் Lock Your Profile என்பதை கிளிக் செய்து உறுதிப்படுத்த வேண்டும். எனினும் இவ் வசதியானது தற்போது இந்தியாவிலுள்ள பேஸ்புக் பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்ககது.