பேஸ்புக் படைக்கும் புதிய சரித்திரம்..!!

உலகளாவிய ரீதியில் பிரபலம் அடைந்து வரும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக பேஸ்புக் விளங்குகின்றது. இது அதிகளவான பாவனையாளர்களை கொண்டுள்ளது. இந்த பேஸ்புக் நிறுவனத்திற்கு போட்டியாக பல நிறுவனங்கள் வந்துள்ளது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள் பிளஸ் எனும் சமூக வலைத்தளத்தினை அறிமுகம் செய்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இருப்பினும் அதனை பிரபலமாக்க முடியாமையினால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தியிருந்தது.
ஆனால் பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்தும் அபார வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றது. இந்த நிலையில் அண்மையில் இன்னுமொரு புதிய மைல்கல்லை பேஸ்புக் நிறுவனம் எட்டியுள்ளது.

அதாவது அன்ரோயிட் சாதனங்களில் இதுவரை 5 பில்லியன் தடவைகளுக்கு மேல் பேஸ்புக் அப்பிளிக்கேஷன் நிறுவப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தில் கூகுள் அப்பிளிக்கேஷன் அல்லாத மற்றொரு அப்பிளிக்கேஷன் இவ்வளவு எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளது. கூகுளின் சில அப்பிளிக்கேஷன்கள் கூட அன்ரோயிட் இயங்குதளத்தில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் பேஸ்புக் அப்பிளிக்கேஷனை பாவனையாளர்கள் தாமாகவே தரவிறக்கம் செய்து வருகின்து.