அன்ரோயிட் சாதனங்களில் மட்டும் பயன்படுத்தக்கூடிய புத்தம் புதிய ஈமோஜிக்கள்அறிமுகம் செய்த வாட்ஸ் அப்…!!!

உலக அளவில் வாட்ஸ் அப் பிரபல்யம் அடைந்து வருகின்றது. வாட்ஸ் அப் போன்ற மெசேஜ் செயலிகள் மனதளவில் பாவனையாளர்களின் ஆரோக்கியத்துக்கு உதவும். அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்றாகும்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

தற்போது உலக அளவில் பல மில்லியன் பாவனையாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது. பல சிறப்பினைக் கொண்ட அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் வழங்கப்பட்டிருந்தது.

2.19.315 எனும் புதிய வாட்ஸ் அப் பதிப்பிலுள்ள ஈமோஜிக்களுக்கு மேலதிகமாக சில புதிய ஈமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர ஏற்கனவே உள்ள சில ஈமோஜிக்கள் அப்டேட் செய்யப்பட்டும் உள்ளன. அதன் அடிப்படையில் 230 வரையான ஈமோஜிக்களை அன்ரோயிட் பாவனையாளர்களை தற்போது பயன்படுத்த முடியும். இருப்பினும் iOS சாதனங்களை பயன்படுத்துபவர்கள் தற்போது இவற்றினைப் பயன்படுத்த முடியாது. மேலும் இந்த நிலையில் iOS சாதனங்களுக்கான புதிய வாட்ஸ் அப் பதிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.