திருமண நாளில் மனைவிக்கு யாருமே கொடுக்காத ஒன்றை பரிசாக கொடுத்து அசத்திய கணவர்.!! யார் இவர்.? என்ன கொடுத்தார் தெரியுமா.? இதை படியுங்கள்.!!
மனைவி மீது அதிக அன்பு கொண்ட கணவர்கள் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது நாம் வரலாற்றில் படித்தவை, மனைவிகளால் பரிசு பொருட்கள் வாங்க முடியாது, ஆனால் கணவருக்காக தனது உயிரையே தியாகம் செய்துள்ளனர், இவை எல்லாம் நாம் பல காதல் காவியங்களில் படித்து இருக்கிறோம், நிஜத்தில் எம்மால் பார்க்கக் கூடியதாக இருப்பது தாஜ்மஹால் தான்.
இந்த நிலையில் இளம் கணவர் ஒருவர் மனைவிக்கு வித்தியாசமான திருமண நாள் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். 6 வருடங்கள் காதலித்து மனைவியை கரம்பிடித்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தர்மேந்திரா. மனைவி மீது அளவில்லா அன்பு கொண்ட தர்மேந்திரா மனைவி சப்னாவிற்கு மறக்க முடியாத திருமண நாள் பரிசை கொடுக்க விரும்பினார்.
பிரேஷிலில் வசிக்கும் இவர் நண்பர்கள் மூலம் இது பற்றி தேடி பார்த்த போது நிலாவில் இடம் வாங்கலாம் என்ற எண்ணம் வந்துள்ளது, இதனை தொடர்ந்து லூனர் சொசைட்டி என்ற நிறுவனத்தில் நிலாவில் இடத்தை வாங்கி உள்ளார். இதற்காக இவர் மிகப் பெரிய தொகை ஒன்றை கொடுத்துள்ளார். வழமை போல் திருமண கேக் வெட்டிய பின் உன் அன்புக்கு என் சிறிய பரிசு, உன் அன்புக்கு முன் இது சிறிது தான்,
ஆனாலும் ஏற்றுக் கொள் என கூறி நிலாவில் இடம் வாங்கியதற்கான சொத்து பத்திரத்தை கொடுத்துள்ளார். சாதாரணமாக வாங்கி பார்த்த மனைவி அதிர்ந்து போய் உள்ளார். யாரும் எதிர்பார்க்காத நிலவில் இடம் வாங்கியதற்கான சான்றிதழ் அது. இந்த செய்தி வைரலானதை தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த தர்மேந்திரா சப்னாவின் அன்புக்கு முன் இது சிறிய பரிசு, அவளுக்கு பொருத்தமானதை மட்டுமே செய்வேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த இடத்தின் விலை பற்றி கேட்டதற்கு தர்மேந்திரா பதில் அளிக்கவில்லை!!