" "" "

தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மை காரணம் வெளியானது.! கதறி அழும் பிரசன்னா.!!

தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா இன்று காலை 10 மணியளவில் சென்னை எருக்கங்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக.,வின் முன்னணி பேச்சாளரான தமிழன் பிரசன்னா நதியாவை காதலித்து 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த ஜோடிக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகளிற்கு நமது Youtube பக்கத்தினை Subscribe செய்திட, இங்கே க்ளிக் செய்யுங்கள்

மிக ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருந்த குடும்பத்தில் எப்படி இப்படியான ஒரு சம்பவம் நிகழ்ந்தது என உறவுகள் அதிர்ச்சியடைந்த நிலையில் தமிழன் பிரசன்னா கூறியிருப்பதாவது. ஒவ்வொரு வருடமும் நதியாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடுவோம் இம்முறை வழமை போல் அவரது தோழிகளை அழைத்து பிறந்த நாள் கொண்டாடுவோம் என நேற்றைய தினம் கேட்டார்.

ஆனால் கொரோனா காலத்தில் பிறந்த நாள் கொண்டாடுவது முறை இல்லை என்றேன், இதனால் சிறு சண்டை ஏற்பட்டது. பின் சாதாரணமாகவே இருந்தாள். காலையில் கூட நன்றாக பேசினாள். பின் என் வேலைகளை நான் செய்ய ஆரம்பித்துவிட்டேன். நீண்ட நேரம் நதியாவை காணவில்லை என்பதால் கூப்பிட்டேன், அவரை காணவில்லை.

என்னோடு கோபத்தில் இருப்பார் என தேடிச் சென்ற போது அவளது அறையில் உள்ள மின்விசிரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தாள். உடனடியாக தனியார் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவள் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள் என விசாரணையில் தமிழன் பிரசன்னா கூறியிருந்தார். இந்த நிலையில் அயலவர்களிடம் கேட்ட போது மிகவும் அன்பாக தான் இருந்தார்கள் ஆனால் கடந்த சில வாரங்களாக சண்டை இருந்தது என தெரிவித்துள்ளனர்.!