" "" "

ஆசை ஆசையாய் கணவர் வீடு சென்ற இளம் பெண்.! சடலமாக பார்த்த பெற்றோர்.! தொடரும் கொடூர மரணங்கள்.!!

திருமணமாகி 3 மாதங்கள் கூட வாழாத நிலையில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப் பட்டுள்ளார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தாங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்
ராஜேஷ் என்கிற லாரி ஓட்டுனரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார்.

ராஜேஷ் வசித்து வரும் அதே பகுதியை சேர்ந்த
தன்யா தாஸ் யுவதிக்கு பெற்றோர்கள் வரன் பார்த்த நிலையில் தரகர் ஒருவரின் மூலம் ராஜேஷின் குடும்பத்தினர் ராஜேஷ் பெண் பார்க்கும் விடயம் தெரிய வந்துள்ளது. பின்னர் இரு வீட்டாரும் முறைப்படி திருமணம் பேசியதுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து வைத்தனர்.

திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்த நிலையில் தன்யா தாஸ் கணவர் தொடர்பாக பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார். வரதட்சணை போதாது என ஆரம்பித்த பிரச்சனை இனி வாழ முடியாது என தொடர்ந்துள்ளது. கணவர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சரியாக முகம் கொடுத்து பேசாத நிலையில் இது பற்றி கேட்ட தன்யா தாஸிடம் வரதட்சணை போதாது வாங்கி வா, இல்லவிட்டால் வாழாதே என கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மூன்று மாதங்கள் கணவருடன் வாழ போராடியுள்ளார். இருப்பினும் கொடுமை அதிகரித்துள்ளது. இது பற்றி பெற்றோரிடம் கூறிய தன்யா தாஸ் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகளை பார்க்க வந்த பெற்றோர் தூக்கில் தொங்கிய நிலையில் பார்த்து அதிர்ந்துள்ளனர். உடனடியாக பொலீஸாருக்கு அறிவித்த நிலையில் மகளின் சாவுக்கு காரணம் ராஜேஷ் தான் என புகார் கொடுத்த நிலையில் ராஜேஷை பொலீஸார் கைது செய்துள்ளனர்.!!