" "" "

மக்களை ஏமாற்றும் Bigg Boss நிகழ்ச்சி பற்றிய அதிர வைக்கும் உண்மைகள்!

பிக்பாஸ் என்கின்ற ரியாலிட்டி சோ என்று நம்பப்படுகின்ற நிகழ்வைக் கண்டுகளிக்கும் கோடான கோடி பொதுமகன்களில் நீங்களும் ஒருவரா? அப்போ பிக்பாஸ் பற்றி நீங்கள் அறியாத சில விசயங்களை நாங்க இப்போ உங்களுக்கு சொல்லப் போகின்றோம். அதுவும் பிக்பாஸ் என்ற நிகழ்வின்  பின்புலத்தில் காய் நகர்த்திக் கொண்டிருக்கும்  உங்கள் வாழ்வின் பொருளாதார நுண்ணரசியல் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.  அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

பிக்பாஸ் என்கின்ற தொலைக்காட்சி நிகழ்வானது நகரம் தொடங்கி கிராமம் வரை சிறுவர் தொடக்கம் பெரியவர்கள் வரை ஆர்வமாகப் பார்க்கின்ற ஒரு யதார்த்த (ரியாலிட்டி) நிகழ்ச்சி என்று சொல்லப்படுகின்ற ஒரு பிரபல்யமான நிகழ்வாக இருந்து வருகின்றது.

இந்த நிகழ்வானது ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் பல்வேறு பிரபலங்களால் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது  ஒரு போலியானது, ஸ்கிரிப்டட் அதாவது ஏற்கனவே திட்டமிடப்பட்ட போலி நாடகம் என்பதாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளபோதும் நாம் அனைவரும் இந்த நிகழ்வை எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றிய குழப்பங்கள் நமக்கிடையே உள்ளன.

உண்மையில் இந்த பிக்பாஸ் என்கின்ற நிகழ்வானது முதலாளித்துவத்தின் தெளிந்த விசத்தை மக்கள் மேல் பாய்ச்சுவதற்காக கூட்டுக்குடும்பம் என்கின்ற வாழ்க்கை முறையை கையில் எடுத்துள்ளதா என்பது பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா?

சரி இந்த பிக்பாஸ் என்கின்ற பெரிய முதலாளி நம்மை சிரிக்க வைக்கின்றார், அழவைக்கின்றார், சுய மதிப்பீடு செய்ய வைக்கின்றார், கோபப்பட வைக்கின்றார், தீர்ப்புக் கூற வைக்கின்றார், முடிவெடுக்க வைக்கின்றார். இவையெல்லாம்  நமக்கு வெளிப்படையாகத் தெரியக் கூடிய நிஜங்கள். இவற்றையெல்லாம் தாண்டி பொருளாதார அடிப்படையில் சில உண்மைகள் இருப்பதை எப்போதாவது உணர்ந்துள்ளீர்களா?

முதலில் இந்த இரு கேள்விகளையும் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

நாம் பொருளாதார ரீதியாக இந்த நிகழ்வை எவ்வாறு அணுகுகின்றோம்?

கூட்டுக்குடும்ப மனநிலையை உடைப்பதன் பின்னாலுள்ள பொருளாதார அரசியல் பற்றி யோசித்ததுண்டா?

பொருளாதாரம் என்றதும் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்குபவர்களை் நம் நினைவிற்கு வரலாம். பிக்பாஸ் போட்டியாளர்கள் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் தொடக்கம் உண்ணும் உணவு வரை அனைத்துமே விளம்பரமயப்படுத்தப்பட்டதே. அந்த உற்பத்திகள் நம் வாழ்க்கையிலும் மெல்ல நுழையத் தொடங்கும் என்பது நமக்கும் தெரிந்ததே.

அதேநேரம் பிக்பாஸ் என்கின்ற இந்த யதார்த்த நிகழ்வு கண்ணுக்குப் புலப்படாமல் பின்னியுள்ள பொருளாதார நுண்ணரசியல்தான் இந்தக் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை உடைப்பது். அது எவ்வாறு என்று கேட்கின்றீர்களா?

பிக்பாஸில் நிகழ்வது என்ன?

சண்டை, புறம்பேசுதல், முதுகில் குத்துதல், வஞ்சகம், பொறாமை, போலி அன்பு.  பிக்பாஸ் என்கின்ற கூட்டுக்குடும்பம் எவ்வாறான சிக்கல்களையெல்லாம் ஒரு மனிதன் எதிர்கொள்ளக்கூடும் என்கின்ற மன ரீதியான சிந்தனையை தனிமனித மனதின் அடியாழத்தில் வேரூன்றச் செய்வதன் பின்னால் உள்ள பண முதலாளிகள் மற்றும் கார்பரேட் கம்பனிகளின் திட்டம்தான் யாது?

வேறொன்றுமில்லை.

கூட்டாக இருக்கும் குடும்பங்களை உடைத்து தனித்தனியாக அவர்களின் பொருளாதாரத் தேவையை அதிகரிக்கச் செய்வது. இதன் மூலம் 3 குடும்பங்கள் ஒன்றாக ஒரு தொலைக்காட்சியையும் ஒரு சலவை இயந்திரத்தையும் பயன்படுத்தினால் அதே கூட்டு குடும்ப மனநிலை உடைகின்றபோது அங்கு அவர்களின் 3 குடும்பங்கள் உருவாகும். அந்த மூன்று குடும்பங்களின் பொருளாதாரத் தேவைகளும் பல்கிப் பெருகும்.

இது பொருளாதார முதலிகளிற்கு பெரும் வெற்றிதானே?

எனவே மக்களின் பொருளாதாரம் என்பது அவர்களின் முடிவுகளையும் தாண்டி இன்று பணமுதலாளிகளின் நிகழ்ச்சி நிரலில்தான் தங்கியுள்ளது என்பது இம் மாதிரியான நிகழ்வுகளின் மூலம் தெளிவாகப் புலப்படுகின்றது.

நிஜத்தில் இந்த நிகழ்வில்  மனரீதியாக பொருளாதார ரீதியாக நெருக்கீட்டிற்கு உள்ளாவது கமசே்காசனோ , சல்மான்கானோ அல்லது ஓவியாவோ மும்தாஜோ இல்லை. நிஜமான பாதிப்பு என்பது நம்மைப்போல் குப்பனுக்கும் சுப்பனுக்குமே. ஆகவே மக்களே உசாராகிக் கொள்ளுங்கள்.!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”