" "" "

விரும்பிய மொழியில் நாம் யூடியூப் தளத்தின் கட்டளைகளை மாற்றியமைக்க இதை செய்யுங்கள்!

உலகளவில் பிரபல்யம் அடைந்த வருகின்ற முன்னணி வீடியோ தளமான யூடியூப் தளத்தில் நாள்தோறும் பல மில்லியன் வரையான பாவனையாளர்கள் வீடியோக்களை பார்வையிட்டு வருகின்றனர். யூடியூப் தளமானது பொதுவாக ஆங்கில மொழியிலேயே கட்டளைகளைக் காண்பிக்கும். இருப்பினும் தாம் விரும்பிய மொழியில் யூடியூப் தளத்தின் கட்டளைகளை மாற்றியமைக்கக்கூடிய வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அவ்வாறு மொழியினை மாற்றியமைப்பதற்கு கீழ்வரும் படிமுறைகளைப் பின்பற்றவும்.

முதலில் தாம் விரும்பிய இணைய உலாவியினை திறக்கவும். அதில் யூடியூப் தளத்திற்கு சென்று காண்பிக்கப்படும் தமது கணக்கிற்கான படம் மீது கிளிக் செய்யவும். அப்போது மெனு ஒன்று தோன்றும்.
அவ்வாறு தோன்றும் மெனுவில் Language என்பதை கிளிக் செய்யவும். அப்போது தோன்றும் மெனுவில் தாம் விரும்பிய மொழியினை தெரிவு செய்து கிளிக் செய்தால் போதும் அம் மொழியில் யூடியூப் தளத்தின் கட்டளைகள் காண்பிக்கப்படும். அங்கு தமிழ் மொழியிலும் மாற்றியமைக்கக்கூடிய வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.