" "" "

கூகுள்-ஆப்பிள் கொரோனா வைரஸ் அப்பிளிக்கேஷனை முதல் முதலில் லாட்வியா நாடு அறிமுகம் செய்துள்ளது!

தொழிநுட்ப உலகில் முன்னணி நிறுவனமான கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒன்றிணைந்து கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்தினை கண்டறியக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி அப்பிளிக்கேஷன் ஒன்றினை தயாரிப்பதாக முன்னரே தகவல் வெளியாகியிருந்தது. அப்படியான ஒரு நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லாட்வியா நாட்டில் (Latva) இந்த அப்பிளிக்கேஷனை முதன் முதலில் அறிமுகம் செய்யும் நாடுகளுள் ஒன்றாக இருப்பதால் தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

எனினும் அதற்கு முன்னர் சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியாவில் அவ்வாறு ஒரு அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனில் சில குறைபாடுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ப்ளூடூத்தின் உதவியுடன் கொரோனா வைரஸ் தொற்றியவரை அடையாளம் காணுவது தொடர்பாக குறித்த அப்பிளிக்கேஷன் ஐபோன்களில் மிகவும் குறைந்த தூரத்திற்கே செயற்படுகின்றது. அதேநேரம் Lativaவில் அறிமுகம் செய்யும் Apturi Covid (Stop Covid) எனும் அப்பிளிக்கேஷனானது உலகிலுள்ள 99 சதவீதமான iOS மற்றும் Android சாதனங்களில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.