" "" "

தொண்டை வலி, தொண்டை கரகரப்பினால் அவஸ்த்தை படுகின்றீர்களா.? இதோ உடனடி தீர்வு..!!

மனிதனாக பிறந்துவிட்டோம் அதனால் வாழ ஆசைப்படுகின்றோம். இந்த வாழ்க்கையை இறுதி வரை ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே ஒவ்வொருவருக்குமான எண்ணம் ஆனால் இது நிறைவேறுகிறா என கேட்டால் பதில் இல்லை என்பது தான். என்ன செய்வது அன்றைய மனிதர்களின் ஆரோக்கியத்தில் இன்று எம்மிடம் துளியும் இல்லை.

முன்னோர்கள் கல் உடைத்து, உடல் உழைத்தார்கள் உணவினை இயற்கையாக உண்டார்கள். அவர்கள் எந்த அளவிற்கு மனதை ரிலக்ஸாக வைத்து உடலை வருத்தினார்களோ அந்த அளவிற்கு நாம் மனதை வருத்தி உடலை ரிலாக்ஸ் ஆக வைக்கிறோம்.ஆனால் மன அமைதி மகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சி தானே மனிதனின் ஆரோக்கியம்.ஆரோக்கியமான மருத்துவ குறிப்பு பகுதியில் இன்று தொண்டை கரகரப்பு, தொண்டை எரிச்சல், தொண்டை வலி, போன்றவற்றிற்கு என்ன தீர்வு ?

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.நீங்கள் விலை கொடுத்து மருந்து வாங்க வேண்டாம் இது இயற்கை மருத்துவம். இதற்காக மிதமான சூட்டில் ஒரு கப் நீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதனுடன் அரை கரண்டி தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை குடியுங்கள் தொண்டை கரகரப்பு ஓடி போய் விடும்.!இன்னும் சில டிப்ஸ். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைய்யுங்கள்.

அதனுடன் துப்பரவு செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி ஒரு கரண்டி சேருங்கள். இரண்டையும் 10 நிமிடம் வரை மிதமான நெருப்பில் கொதிக்க வைய்யுங்கள்.பின் இறக்கி வடித்து வைத்துக் கொள்ளுங்கள் குடிக்க முடிந்த சூடு வந்ததும் சுவைக்கு தேன் கொஞ்சம் சேர்த்து குடியுங்கள்.