சிறுமியை துன்புறுத்திய மூவருக்கு விளக்கமறியல்!

குருணாகல், கொட்டவேஹரப் பகுதியில் சிறுமியொருவரை தாக்கியது தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

குறித்த சிறுமியின் தந்தையும் சித்தியும் (தந்தையின் இரண்டாவது மனைவி), அவரது சகோதரியான கிராம உத்தியோகத்தர் ஆகியோரே இவ்வாறு எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

13 வயதுடைய குறித்த சிறுமியை அவரது சித்தியார் தொடர்ந்தும் சித்திரவதை செய்து வந்த நிலையில், இச்சம்பவம் வீடியோவாக வெளிவந்த நிலையில், அவர்களது செயல் வெளியே வந்தது. இந்நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.