" "" "

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் எடுத்துக் காட்டாக சாதி,மத மறுப்பு திருமணம் செய்துகொண்ட ஜோடியை பிரித்த பேஸ்புக்.! எச்சரிக்கை புதுமண தம்பதியினரே.!!

சாதி, மதங்களை கடந்து மனிதம் முக்கியம் என திருமணம் செய்துகொண்ட ஜோடி சமூக வலைத்தளத்தினால் பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த டினா டபி, அதர்கான் தம்பதியினரே இவ்வாறு பிரிந்துள்ளனர். 2015ம் ஆண்டு நடந்த யூ.பி.எஸ்.சி தேர்வில் அனைவரையும் பின் தள்ளி முதலிடம் பிடித்தவர் ஜெய்பூரை சேர்ந்த பட்டிலனத்தை சேர்ந்த டினா டபி. இதே தேர்வில் இரண்டாம் இடம் பிடித்தவர் காஷ்மீரை சேர்ந்த அதர்கான்.

இருவரும் தேசிய பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி எடுத்த போது நண்பர்களானார்கள். இந்த நட்பு பின் காதலாக மலர்ந்தது. அதன் பின் இருவரும் டேட்டிங் செல்ல ஆரம்பித்தனர். 2018ம் ஆண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் திருமணம் இடம்பெற்றது. அது மட்டும் இன்றி இவர்கள் விரும்பிய ராஜஸ்தான் மாநிலத்தில் பணியும் கிடைத்தது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

சிறந்த மற்றும் நேர்மையான அதிகாரியாக திகழ்ந்த டினா டபி கொரோனா காலத்தில் மனிதாபிமானம் மிக்க அதிகாரி என்ற விருதும் வாங்கினார். டினாவிற்கு பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் அவர் பற்றிய வதந்திகளும் பரவ தொடங்கியது. டினா தான் சிறந்தவர் என்றும் அதர்கான் டினாவால் பிரபலமாகிறார் என்றும் கூறப்பட்டது.

அத்துடன் போலி கணக்குகளை தொடங்கி அதர்கானை தொடர்ந்து தரம் குறைக்க தொடங்கினார்கள். இதனால் இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட ஆரம்பித்தது, அதன் பின் இருவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிய ஆரம்பித்தனர், இந்த நிலையில் டினா டபிகான் என இணையத்தில் இருந்த பெயரை டினா டபி என மாத்தினார் டினா,

உடனடியாக அதர்கான் டினாவை அன் ப்ளோ செய்ததுடன் ஜெய்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். சாதி, மத, மறுப்பு திருமணம் செய்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எடுத்துக் காட்டாக இருந்த டினா டபி,அதர்கான் ஜோடி விவாகரத்து கேட்டு நிற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!!