வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழையும் அனைவரும் இதனை செய்வோம்..,! கொரோனா வைரஸில் இருந்து எம் குடும்பத்தை காப்போம்…!!

உலகம் முழுவதும் கொரோனா மயமாகி உள்ளது சுமார் 200 நாடுகள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளது. இதில் முதல் ஐந்து இடங்களில் இத்தாலி, ஸ்பெயின், சீனா, அமெரிக்கா, ஈராக் போன்ற நாடுகள் உள்ளது. இந்த நிலையில் கொரொனாவில் இருந்து எம்மையும் எமது குடும்பத்தையும் மட்டும் இன்றி எமது நாட்டையும் காப்பாற்றும் பொறுப்பு எமக்கு உள்ளது.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அதற்கு ஒவ்வொருவரும் கட்டாயம் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும். முதலில் எம்மிடம் கொரோனா நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் வெளியே சென்று வரும் போது உங்கள் கை கால்கள் உடைகள் அணிந்திருக்க்கும் பொருட்களில் கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதற்கு வீட்டிற்குள் நுழையும் போது உங்கள் கை கால்களை மஞ்சள் நீரில் கழுவிய பின் சோப் அல்லது ஆல்ஹாகல் கலந்த சானிடைசர்களை பயன்படுத்தலாம். சானிடைசர் பயன்படுத்தி உங்கள் மொபைல் போன் , கண்ணாடி போன்றவற்றை துடைத்துக் கொள்ளலாம். அடுத்து நீங்கள் அணிந்து செல்லும் ஆடையை உடனடியாக கழுவுங்கள் இல்லாவிட்டால் வெயிலில் 2 மணி நேரம் போட்டு எடுத்த பின் கழுவுங்கள்.

கதிரைகள் மற்றும் கண்ட இடத்தில் ஆடைகளை போடுவதை நிறுத்துங்கள். வீட்டிற்குள் நீங்கள் நுழையும் போது குழந்தைகள் அருகில் வருவதை தடுத்துவிடுங்கள்.குழந்தைகளை எந்த காரணத்திற்காகவும் தூக்காதீர்கள். இவற்றை நீங்கள் செய்வதன் மூலம் கொரோனா வைரஸை முற்றிலும் தடுக்கலாம். இவை உங்களுக்கான சாதாரண அறிவுரை…!!