இன்றைய ராசி பலன்! 09.10.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

09.10.2019 புரட்டாதி மாதம் 22ஆம் நாள் புதன்கிழமையாகும். ஏகாதசி முன் இரவு 7.20 வரை அவிட்டம்,மரண பின் இரவு 1.46 வரையாகும்.சுப நேரம் அதிகாலை 4.32 – 6.02 வரையாகும். எமகண்டம் காலை 7.32 – 9.02 வரையாகும். இராகுகாலம் மதியம் 12.02 – 1.32 வரையாகும். குளிகன் காலை 10.32 – 12.02 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:               எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.  பழைய கடன் பிரச்கைனை கட்டுக்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.  வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும்.  இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:               உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.  பிள்ளைகளின் பொறுப் புணர்வு அதிகமாகும். பிரபலங்கள் உதவுவார்கள்.  வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும்.  உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.  பழைய கடனை திருப்பி கொடுப்பீங்கள்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப் பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம்.  பிற்பகல் முதல் குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.  உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் தடைகள் உடைபடும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:              உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒருவிதபடபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும்.  கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக தேவை.  இன்றைய நாள் திட்டமிட்டு செயல் பட வேண்டிய நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:             உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.  உங்களுடைய அறி வாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு.  விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:             உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.  பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.  வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். புதிய வாகனம் வாங்க நேரிடும்.  இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:            புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.  உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.  பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க வேண்டிவரும்.  உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும்.  தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும்.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.               உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.  வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.  புதிய நட்பு கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  புது வேலைக் கிடைக்கும். தொழிலில் இலாபம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.  முன் பின் தெரியாத நபர்களிடம் கவனமாக இருக்கவும்.  மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும்.  இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:             நீங்கள் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு.  சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.  விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். சொந்த பிரச்சினைக்கு சுமூக பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு கிடைக்கும்.  உடல் சோர்வு நீங்கும். இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும். 

மகர ராசி காரர்களே:           உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் வீண் அலைச்சல் வந்துப் போகும்.  தம்பதியினருக்கு இடையில் இருந்த மோதல்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.  வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். ஆன்மீக நாட்டம் கூடும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.  மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.  இன்றைய நாள் அத்தியாயம் தொடங்கும் நாளாகும்.

 கும்ப ராசி உறவுகளே:          உங்கள் ராசியில் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப்போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டி கள் இருக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  குடும்ப தேவைகள் அதிகரிக்கும். விட்டு கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும்.  மன நிம்மதிக்காக தியானம் செய்யவும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

 மீன ராசி நேயர்களே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  பிள்ளைகள் விஷயத்தில் வளைந்துக் கொடுத்துப் போங்கள். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்.  உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.  எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.  நிறைவேறாத ஆசைகள் இப்போது நிறைவேறும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.