இன்றைய ராசி பலன்! 08.11.2019

புரட்சி உறவுகளே அன்பான இனிய காலை வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் நல்ல நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

08.11.2019 ஐப்பசி மாதம் 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும்.  ஏகாதசி பின் பகல் 1.41 வரை பூரட்டாதி பின் பகல் 1.56 வரையாகும்.  சுப நேரம் காலை 6.05 – 7.35 வரையாகும்.  எமகண்டம் மதியம் 3.05 – 4.35 வரையாகும்.  இராகுகாலம் காலை 10.35 – 12.05 வரையாகும். குளிகன் காலை 7.35 – 9.05 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:            சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும்.  பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.  வாகனங்களில் பழுது ஏற்பட்டு சரியாகும்.  உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஓரளவு இலாபம் உண்டு.  குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மதிப்புக் கூடும்.  எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும்.  திருமண காரியம் கைகூடி வரும்.  இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:          நீங்கள் சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக பேசி முடிப்பீர்கள்.  பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.  நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும்.  வியாபாரத்தில் புதிய யுத்திகளினால் நல்ல இலாபம் பெறுவீர்கள்.  சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். வாழ்க்கைத்துணை வழியில் பணம், பொருள் சேரும். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லுதல் வேண்டும்.  இன்றைய நாள் நன்மைகள் பெருகும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               உங்கள் முன் கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.  நண்பர்களால் ஆதாயம் உண்டு.  உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள்.  வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள்.  எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய கடனை அடைக்க புது வழி கிடைக்கும்.  ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். இன்றைய நாள் சாதனை படைக்கும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் இடம்பெறும். உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள் உடன் பிறந்தவர்கள் உங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.  பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.  உத்தியோகத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள்.  விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். தம்பதியினருக்கு இடையில் நல்ல ஒற்றுமை இருக்கும்.  நட்பு வட்டம் விரிவடையும்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:           உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும்.  அதிக வேலை சுமைகளினால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.  குடும்பத்தில் உள்ளவர் வளைந்து கொடுத்து போவது நல்லது.  யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.  வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அணுசரனையாக நடந்து கொள்ளுங்கள்.  வாக்கு வன்மை கூடும்.  எதிர்பார்த்த காரியம் கால தாமதமின்றி நடக்கும்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் சகிப்பு தன்மை தேவைப்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:              உங்களின் கடினாமான காரியங்களும் எளிதாக முடியும்.  சகோதரர்களால் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  வியாபாரத்தில் கூட்டாளிகளினால் இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.  குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும்.  பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும்.  விரும்பிய பொருட்களை வாங்க முடியும். இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  பண வரவு திருப்திகரமாக இருக்கும்.  பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  பிரபலங்கள் மற்றும் அதிகார பதவிகளில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.  அரசு தொடர்பான காரியங்கள் சுலபமாக முடியும். வழக்கில் வெற்றி கிடைக்கும்.  உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும்.  குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர்.  வாகன யோகம் உண்டு. இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:              உங்கள் பிள்ளைகளுக்காக சில விஷயங்களை விட்டு கொடுப்பீங்கள்.  குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும் சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள்.  உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும்.  அண்டை அயலார்கள். உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.  குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  இன்றைய நாள் உயர்வு பெறும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              உங்கள் முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள்.  தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.  வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.  உறவினர்கள் உங்களை உதவி கேட்டு நாடி வருவார்கள்.  பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  பிள்ளைகளின் கல்வி அந்தஸ் உயரும்.  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

மகர ராசி காரர்களே:               உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  துணிச்சலாக சில மிக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் சகோதரர்கள் உங்களின் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள் வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்பீர்கள்.  பூர்வீக சொத்து பிரச்சனைகள் சாதகமாக முடியும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  காரியம் அனுகூலம் உண்டாகும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்.  இன்றைய நாள் துணிவுடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.  விலகி சென்றவர்களும் விரும்பி வருவார்கள். நீண்ட நாளாக வர வேண்டிய பணம்கைக்கு வரும்.  வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் உற்சாகமாக பணிகளை செய்து முடிப்பீர்கள்.  பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டு.  மனதில் புதிய உற்சாகம் ஏற்படும்.  திட்டமிட்ட வேலைகள் எந்தவித தடைகளின்றி முடியும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களை கையில் எடுத்து கொண்டு இருக்காதீர்கள்.  மற்றவர்களின் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம்.  வியாபாரத்தில் அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளினால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தை தொடங்கும்.  உறவினர்கள், நண்பர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.  பண வரவு கூடும்.  சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  தம்பதியினருக்கு இடையில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.