இன்றைய ராசி பலன்! 09.11.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

09.11.2019 ஐப்பசி மாதம் 23 ஆம் நாள் சனிக்கிழமை ஆகும்.  துவாதசி பின் பகல் 3.44 வரை உத்தரட்டாதி, சித்தம் பின் பகல் 4.26 வரையாகும்.  சுப நேரம் மதியம் 3.05 – 4.35 வரையாகும்.  இராகுகாலம் காலை 9.05 – 10.35 வரையாகும். எமகண்டம் மதியம் 1.35 – 3.05 வரையாகும். குளிகன் காலை 6.05 – 7.35 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:                நீங்கள் கொஞ்சம் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.  பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.  கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும்.  இக்கட்டான நேரத்தில் மற்றவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  புதிய வீடு வாங்குவீங்கள். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                 சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வீர்கள்.  பெற்றோரின் ஆதரவு பெருகும்.  பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.  காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.  வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழி யர்கள் பாராட்டுவார்கள்.  சமூக அந்தஸ்த்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும்.  புதிய முயற்சியில் இருந்த தடை விலகும். தம்பதியினருக்கு இடையில் விட்டுக்கொடுத்தல் அவசியம்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:             பழைய நல்ல சம்பவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள்.  சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.  குடும்ப சிக்கலை தீர்க்க முடியும்.  புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்.  மனக்குறைகள் நீங்கும். இன்றைய நாள் சாதனை செய்யும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                   உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.  உங்களால் மற்றவர்கள் பயன் அடைவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் இலாபம் பெருகும்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.  பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள்.  பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  இன்றைய நாள் மாற்றம் தரும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவு எடுக்கப்பாருங்கள்.  வீண் கோபத்தை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.  குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவர்.  இழுபறியில் இருந்த சொத்து பிரச்சினை முடிக்கு வரும்.  வாகனங்களில் பணிக்கும் போது அவதானமாக இருக்க வேண்டும்.  விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  இன்றைய நாள் விழிப்புடன் செயல்படும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:            உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள்.  பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.  திருமணப் பேச்சுவார்த்தை வெற்றி அடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். வருங்காலம் பற்றிய சிந்தனை இருக்கும்.  எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். நண்பர்களிடம் மனம் திறந்து பேசவும்.  இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:                குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள்.  அரசால் அனுகூலம் உண்டு.  வழக்குகள் சாதகமாக திரும்பும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.  வியாபாரத்தில் புது யுத்தியால் விற்பனை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றியடையும்.  வேண்டியவர்களுக்காக அடுத்தவரின் உதவியை நாட வேண்டிவரும்.  திடீர் மருத்துவச் செலவு ஏற்படும்.  புதிய சொத்துக்கள் வாங்குவீங்கள்.  இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:              நீங்கள் மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவு எடுப்பீர்கள்.  உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள்.  வியாபாரத்தில் வேலை ஆட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் உயர் அதிகாரியின் உதவி கிடைக்கும்.  சொந்த பந்தங்கள் கேட்ட உதவியை செய்து தர முடியும். வாகன பராமரிப்பு கூடும்.  நட்பு வழியில் நல்ல செய்தி வரும்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:                நீங்கள் எதிர்ப்பார்த்தவை தள்ளிபோனாலும், எதிர்பாராத ஒருவேலை முடியும்.   தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.  வரவேண்டிய பணத்தை போராடி வசூலீப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சியை முறியடிப்பீர்கள்.  புதிய வாகனம் வாங்குவதற்கு முயற்சிப்பீர்கள்.  குடும்பத்தில் அநாவசியச் செலவுகளை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.  உடன்பிறப்பு வகையில் வீண் அலைச்சல் ஏற்படும்.  இன்றைய நாள் தடைகளை மீறி வெற்றி பெறும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:            உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமைப்படும் சூழ்நிலை உண்டாகும்.  நீண்ட நாளாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும்.  வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும்.  பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும்.  கடினாமான காரியங்களும் எளிதாக செய்ய முடியும்.  பண வரவு திருப்திகரமாக இருக்கும். இன்றைய நாள் முயற்சியால் முன்னேற்றம் பெறும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:            குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். குடும்பத்தின் வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள்.  பழைய பிரச்சனைகளுக்கு மாறு பட்ட அணுகுமுறையால், தீர்வு காண்பீர்கள்.  புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  வியாபாரத்தில் முதலீடு செய்வதால் இலாபம் பெருகும்.  உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பேசுவர்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள்.  மனதில் குழப்பமும், பதட்டமும் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் இலாபம் பெற போராட வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள்.  குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும்.  கோபத்தை குறைத்துக்கொள்ளவும்.  அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். சகோதரர்களின் ஆதரவு கூடும்.  தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை நிலவும்.  இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும்.